அதிமுக தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ள ஜெயலலிதா சிலை தத்ரூபமாக உள்ளது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகதோப்பில் உள்ள பேச்சியம்மன் கோவிலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பேரனுக்கு மொட்டையடித்துக் காது குத்தும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தினகரன் அணியில் சேர்ந்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அவர், அதிமுக ஆட்சி பலமாக இருப்பதாகத் தெரிவித்தார்.