காங்கிரஸ் செய்யாததை பாஜக செய்துள்ளது- மோடி பெருமிதம்

2018-02-25 2,754

48 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்த போதிலும், 48 மாதத்தில் பாஜக செய்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். புதுவையில் ஆரோவில் அருகே பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி அழகான ஊர் என தமிழில் பேச்சை தொடங்கினார். அப்போது அவர் பேசுகையில், புதுச்சேரி சித்தர்கள், தெய்வீக மனிதர்கள் வாழும் பகுதியாகும். புதுச்சேரி நகரமாக, கிராமமாக இருக்கிறது. அரவிந்த் கோஷை ஆரத்தழுவி ஞானகுருவாக்கியது புதுச்சேரி. மகாகவி பாரதியாரை இதயப்பூர்வமாக வரவேற்றதால் தேசிய கவியாக பரிணமித்தார்.


Pm Narendra Modi says in Puducherry that though Congress was in powe for 48 years. It does nothing. But BJP comes to power within 48 months, we have done more and more.

Videos similaires