பூவிருந்தவல்லியில் நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூவிருந்தவல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் கோபால் என்பவரின் மளிகை கடை ஷட்டர் பூட்டை உடைத்து வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் 20 சவரன் தங்க நகை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.