ஐ.சி.சி., செய்த தவறால் சர்வதேச டி.20 அரங்கில் முதலிடத்தை இழந்த பாகிஸ்தான் அணி, இரண்டு நாளில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் வெளியிடப்பட்டு வரும் ஐசிசி அணிகள் தரவரிசையில் டி20 போட்டிக்கான ரேங்கில் பாகிஸ்தான் முதல் இடத்தில் இருந்தது.
சமீபத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. ஒவ்வொரு அணிகளும் தலா இரண்டு முறை மோத வேண்டும்.