பிக்பாஸ் வீட்டில் தீ விபத்து!- வீடியோ

2018-02-23 1

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் நடத்தியதைப் போலவே, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் அந்தந்த மொழியில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களை வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி சில மாதங்களுக்கு முன் முடிவடைந்தது. அதேபோன்று கன்னட மொழியில் நடத்துவதற்கு பெங்களூர் அருகே உள்ள பிடதியில் உள்ள இன்னோவேட்டிவ் ஃபிலிம் சிட்டியில் பிக்பாஸ் வீடு செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட வீட்டில் நேற்று அதிகாலை 3 மணிக்கு தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் பல கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளன. அவர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் பிக்பாஸ் வீட்டின் பெரும்பகுதி எரிந்து சாம்பலாகி விட்டது. சேத மதிப்பு சுமார் 8 கோடி என்கிறார்கள். பிக்பாஸ் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்தச் சம்பவம் குறித்து பிடதி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Kannada Biggboss house set has been set up in Innovative Film City near Bangalore. Fire at this huge house at 3 am yesterday. The fire accident damaged many crores valuable set.

Videos similaires