அமைச்சர் மணிகண்டன் மீது முதல்வரிடம் புகார் அளித்த ஒ.செ- வீடியோ

2018-02-23 177

தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக முதல்வரிடம் புகார் வாசித்திருக்கிறார்கள் ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒன்றிய செயலாளர்கள். ' மாவட்டத்துக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சசிகலா ஆதரவில்தான் பதவிக்கு வந்தார்.

கட்சிக்காரர்களை அவமரியாதை செய்கிறார்' என்றெல்லாம் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். சட்டசபை தேர்தல் நேரத்தில் ராமநாதபுரம் தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் யார்?' என்ற விவாதம் எழுந்தபோது, மண்டபம் முனியசாமி உள்பட பலரது பெயர்கள் அடிபட்டன. ஆனால், தொகுதிக்கு எந்தவித அறிமுகமும் இல்லாத மணிகண்டன் வேட்பாளராக நியமிக்கப்பட்டார்.

AIADMK functionaries of Ramanathapuram Dist had complaint to CM Edappadi Palanisamy against the IT Minister Manikandan.

Videos similaires