முத்தரப்பு தொடரிலிருந்து விராட் கோஹ்லிக்கு ஓய்வு கொடுக்க பி.சி.சி.ஐ திட்டம்- வீடியோ

2018-02-23 350

விராட் கோலி தலைமையிவான இந்திய கிரிக்கெட் அணி தற்பேது தென்ஆப்பிரிக்காவில் விளையாடி வருகிறது. வருகிற 24-ந்தேதியுடன் இந்த தொடர் முடிகிறது.

அடுத்து இந்திய அணி இலங்கையில் நடைபெறும் 3 நாடுகள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. 3-வது நாடாக வங்காளதேசம் கலந்து கொள்கிறது.

இந்தப்போட்டி மார்ச் 6-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை கொழும்பு பிரேம தாச மைதானத்தில் நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.

3 நாடுகள் 20 ஓவர் போட்டியில் இருந்து கேப்டன் விராட் கோலி விலகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வருவதால் அவர் ஓய்வு கேட்க இருக்கிறார்.

bcci planing to give rest for virat kohli