ஹரியானாவில் தன் கணவனை தாக்கிய நபர்களை பெண் ஒருவர் திருப்பி தாக்கி இருக்கிறார். 5 பேரை தனி ஆளாக அந்த பெண் தாக்கி உள்ளார். இது வீடியோவாக வெளியாகி இருக்கிறது. நேற்று இணையம் முழுக்க பல்வேறு நபர்களால் இந்த வீடியோ ஷேர் செய்யப்பட்டு மிகவும் வைரல் ஆகி இருக்கிறது. இந்த பெண் யார் என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை. ஆனால் அந்த 5 பேருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது.