குவாட்டர், ஸ்கூட்டர் இல்ல அப்ப மேட்டர்: நாராயணன் திருப்பதி

2018-02-23 5,842

மேட்டர் பற்றி பேசிய பாஜக நிர்வாகியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்துள்ளனர். உலக நாயகன் கமல் ஹாஸன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கியுள்ளார். ஓட்டுக்கு பணம் எல்லாம் தரவே மாட்டேன் என்று கமல் தெரிவித்துள்ளார். இலவச ஸ்கூட்டர், குவாட்டர் எதுவும் கிடையாது என்று கமல் கூறியுள்ளார். குவாட்டர், ஸ்கூட்டர் கிடையாது - கமல்ஹாசன் . மேட்டர்? என பாஜக நிர்வாகியும், டிவி விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவருமான நாராயணன் திருப்பதி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். உங்கள் கவனத்திற்கு.பாஜக கட்சிக்கு எதிரிங்க வெளியில இல்ல உள்ளயே தான் இருக்காங்க.கேட்டா மேட்டர்னு நான் பணத்தை சொன்னேன்னு சொல்லுவாரு.இதுல spokesperson வேற. .வெளங்கிடும் என ஒருவர் ட்வீட்டியுள்ளார். நாராயணா .. நீங்க காங்கிரஸ் ஓட ஸ்லீப்பர் செல் ஆ ?? பிஜேபி அ டேமேஜ் பண்ற மாதிரியே பேசுறிங்களே எப்பவுமே !!! என ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Netizens blast BJP functionary Narayanan Thirupathy for tweeting ill of actor turned Makkal Needhi Maiam head Kamal Haasan.

Videos similaires