அவருக்கு முன்னாடியே நான் தல : டி.ராஜேந்தர்.

2018-02-22 1,752

அறிமுக இயக்குநர் எஸ்.பி. மோசஸ் முத்துப்பாண்டி இயக்கத்தில் முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ளது 'பதுங்கி பாயனும் தல' திரைப்படம். இந்தப் படத்தில் 'பர்மா' படத்தில் நடித்த மைக்கேல் நாயகனாக நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி, சிங்கப்பூர் தீபன், சிங்கம்புலி, மனோகர், எம்.எஸ்.பாஸ்கர் எனப் பெரிய காமெடிப் பட்டாளமே நடித்துள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் டி.ராஜேந்தர் பேசினார். இந்த விழாவிலும் அடுக்குமொழி வசனத்தைத் தெறிக்கவிட்டார் டி.ராஜேந்தர். 'பர்மா' படத்தில் நடித்த மைக்கேல் நாயகனாக நடிக்கும் 'பதுங்கி பாயனும்' தல படத்தை எஸ்.பி.மோசஸ் முத்துப்பாண்டி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ரோவின் பாஸ்கர் ஒளிப்பதிவும், வல்லவன் சந்திரசேகர் இசையமைப்பும் செய்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் டி.ராஜேந்தர் பேசினார். என்னை தலனு அவர் கூப்பிட்டாரு. 1980 மே மாசம் ஒண்னாந்தேதி ரிலீஸ் ஆச்சே.. ஒருதலைராகம். அப்பவே நான் தல. அப்பவே தமிழ்நாடு இல்ல உலகமே தெரிஞ்சிக்கிச்சு இந்த தமிழனோட கலை.. அதனால்தான் டி.ராஜேந்தருக்கு கொடுக்குறாங்க விலை. ஆனா, அரசியல்ல போகமாட்டேன் விலை!" எனப் பேசினார்.

Debut director Moses Muthupandi directed the film 'Padhungi Paayanum Thala'. 'Burma' hero Michael has acted as the hero in this film. T.Rajendhar spoke at audio launch of the film.

Videos similaires