சென்னையில் காதலியை குத்திவிட்டு காதலனும் தற்கொலை முயற்சி- வீடியோ

2018-02-20 2

சென்னை அண்ணா நகர் டவர் பூங்காவில் காதலர்கள் இடையே நடந்த தகராறு கத்திக்குத்தில் முடிந்துள்ளது. காதலியை கத்தியால் குத்திவிட்டு தற்கொலைக்கு முயன்ற காதலன் இருவரும் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை அண்ணா நகர் டவர் பூங்காவில் காதல் ஜோடிகளின் நடமாட்டம் இருக்கும். இன்று மாலை பூங்கா திறந்த சமயத்தில் ராஜேஷ், நிவேதா இருவரும் பூங்காவிற்கு வந்துள்ளனர். இவர்கள் இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது இருவருக்கும் இடையேயான வாய்ப்பேச்சு முற்றி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது காதலன் ராஜேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நிவேதாவை தாக்கியுள்ளான்.

Videos similaires