டெல்லி மாநில தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷ், அம்மாநில முதல்வர் கேஜ்ரிவால் இல்லத்தில் நேற்று இரவு நடந்த ஆலோசனை கூட்டத்தின்போது தாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
மொத்தம் 11 ஆம்ஆத்மி எம்எல்ஏக்களால் தாக்கப்பட்டதாக தலைமைச் செயலாளர் போலீசில் புகார் அளித்துள்ளதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலிடம் அறிக்கை கேட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்