தன்னை ஏதாவது சிக்கலில் சிக்கவைக்க சிலர் தொடர்ந்து முயற்சித்து வருவதாக சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனைச் சந்தித்த பின்பு ஜெ.தீபாவின் கணவர் மாதவன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் நிறுவனருமான ஜெ.தீபாவின் இல்லத்தில் தன்னை வருமான வரித்துறை அதிகாரி என்று அறிமுகப்படுத்திகொண்ட போலி நபர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது வெளியான வீடியோ ஒன்றில் ஜெ.தீபாவின் கணவர் மாதவன் தான் தன்னை தீபாவிடம் இருந்து பணம் பறிக்க அனுப்பி வைத்ததாகவும், அதற்கான போலி ஆவணங்களையும் அவர் தான் தயார் செய்து கொடுத்ததாகவும் போலீஸில் தெரிவித்தார்.