இதோ வருகிறார், அதோ வருகிறார் என அனைவரது கண்களும் ரஜினியை எதிர்பார்த்திருந்தபோது, நான் வந்துட்டேன்... என்று சர்ப்ரைஸ் கொடுத்தபடி முன்னே பயணித்துக்கொண்டுள்ளார், கமல்ஹாசன். ஜெயலலிதாவின் அந்திமக்காலம் தொட்டே, ஆள்பவர்களுக்கு குடைச்சல் கொடுத்தபடிதான் இருந்தார் கமல்.
சென்னை பெரு வெள்ளத்தின்போது கமல் கூறிய கருத்தால் கடுப்பாகிப்போன அப்போதைய அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பல பக்கத்திற்கு வசை மாரி பொழிந்து ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, இந்த வேலையை இப்போதுள்ள அமைச்சர் ஜெயக்குமார் பார்த்துக்கொள்கிறார். மொத்தத்தில் கமல் தொடர்ந்து ஆள்பவர்கள் கண்ணுக்குள் விழுந்த துரும்பு போல துருத்திக்கொண்டே உள்ளார்.
Which political party is going to get affected by Kamal Haasan's news political party? here an analysis about that.