ஒருதினப் போட்டிகளில் 400 விக்கெட், ஒட்டுமொத்தமாக 600 கேட்ச்கள் என சாதனைகளை விரட்டி விரட்டி செய்து வரும் டோணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியின் போது மற்றொரு புதிய சாதனையை நிகழ்த்தினார்.
இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் விளையாடி வருகிறது. ஒருதினப் போட்டித் தொடரை 5-1 என்ற கணக்கில் வென்றது. அடுத்ததாக, 3 போட்டிகள் கொண்ட டி-20 போட்டித் தொடரின் முதல் ஆட்டத்திலும் இந்தியா வென்றது.
ஒருதினப் போட்டித் தொடரின் மூன்றாவது ஆட்டத்தின்போது, ஒருதினப் போட்டியில், 400 விக்கெட்டை வீழ்த்திய, முதல் இந்திய விக்கெட் கீப்பர், உலக அளவில் 4வது விக்கெட் கீப்பர் என்ற சாதனை கேப்டன் கூல் மகேந்திர சிங் டோணி படைத்தார்.
indian cricket player ms dhoni makes onr more record in t20 matches