காதலனுடன் உடல் உறவு வைத்துக்கொண்டதை பெற்றோரிடம் சொல்லாமல் இருந்ததால், வயதால் மைனர் என்றாலும் கூட, மனதால் அவர் பெரிய மனுஷி என்று கூறியுள்ள மும்பை ஹைகோர்ட், பலாத்கார குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை விடுதலை செய்துள்ளது. டெல்லி, நிர்பயா பலாத்கார சம்பவத்தில், பலாத்காரம் மற்றும் கொலை ஆகிய கொடூர குற்றங்களில் ஈடுபட்டபோதிலும், மைனர் என்பதற்காக அதில் ஒரு குற்றவாளிக்கு, குறைந்தபட்ச தண்டனை வழங்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் மனப்பக்குவம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.