அகமதாபாத்: குஜராத்தில் கால் நூற்றாண்டுகாலம் கூட தாங்க முடியாமல் தள்ளாடத் தொடங்கிவிட்டது பாஜக.. இந்த கட்சிதான் தமிழகத்தில் நூறாண்டுகாலமாக கோலோச்சிக் கொண்டிருக்கும் திராவிட அரசியலுக்கு முடிவுரை எழுதப் போவதாக சபதமெடுத்துக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் திராவிட அரசியல் என்பது வாக்கு வங்கிக்காக உருவானது அல்ல.. இந்தியா என்கிற கட்டமைப்பு உருவாவதற்கு முன்பே சமூக விடுதலை, சமூக நீதிக்காக உருவானதுதான் திராவிடம்.
மெத்த படித்த மேதைகள், சமூகத்தில் செல்வந்தர்களாக வலம் வந்தவர்கள் மண்ணின் மக்கள் மீது அக்கறை கொண்டு தங்களை சர்வபரி தியாகத்துக்கும் உள்ளாக்கிக் கொண்டு கட்டமைத்தது என்பது திராவிடம். திராவிடம் என்பது சென்னை கோட்டையில் கோலோச்சுவது அல்ல.
The BJP party is trying to end the Dravidian Politics Era in Tamilnadu.