அதிமுகவில் யாரையும் சந்திக்கப்போவதில்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தார். இதைத்தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கமலின் அரசியல் பயணம் வெற்றிபெற வாழ்த்த வந்ததாக சீமான் தெரிவித்தார்.