அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் உடல் நலக்குறைவால் அப்போலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிமுகவில் துணை ஒருங்கிணைப்பாளராக உள்ளவர் வைத்திலிங்கம். இவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் இணைவதற்கு முக்கிய நபர்களில் ஒருவதாக இருந்தார். இரு அணிகள் இணைப்பிற்கு பிறகு வைத்திலிங்கத்திற்கு துணை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இன்று அதிகாலை வைத்திலிங்கத்திற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் கிரீம் சாலையில் உள்ள அப்போலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
Des : AIADMK co-ordinator Vatiligam has been admitted to the Apollo Hospital by the health department. Doctors say she is being treated for serious treatment.