சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட ஜாம்பவான்களையெல்லாம் சப்ஜாடாக தூக்கி ஓரம் கட்டி விட்டார் விராத் கோஹ்லி. 35வது ஒரு நாள் சதத்தைப் போட்டுள்ள அவர் பல சாதனைகளை அடித்து நொறுக்கி அள்ளி விட்டார்.
29 வயதிலேயே சாதனைகளைக் குவித்துள்ள அசகாய சூரராக வலம் வருகிறார் கோஹ்லி. ரசிகர்களால் கடவுள் என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் செய்த சாதனைகளை படு சாதாரணமாக ஊதித் தள்ளிக் கொண்டிருக்கிறார் கோஹ்லி.
சதம் போடுவது அவருக்கு அல்வா சாப்பிடுவது போல. சரமாரியாக போட்டுக் குவித்துக் கொண்டிருக்கிறார். இதோ இப்போது ஒரு நாள் போட்டிகளில் 35வது சதத்தைப் போட்டு பல சாதனைகளை முறியடித்துள்ளார்.
india vs south africa 6th odi. india won by 8 wickets, virat kohli creates many records in this series