ஒவ்வொருவரும் கட்டாயம் வயிற்றின் மேல் பகுதியில் வலியை உணர்ந்திருப்போம். அப்படி வலி ஏற்படும் போது, நம்மில் பலர் அதை சாதாரணமாக நினைத்து விட்டுவிடுவர். ஒருவரது வயிற்றின் மேல் பகுதியில் ஏற்படும் வலியானது உணவுக்குழாய் அல்லது இரைப்பையில் உள்ள பிரச்சனையைத் தான் குறிக்கும். சில சமயங்களில் மேல் வயிற்று வலி வேறு பல காரணங்களாலும் வரக்கூடும். அதில் சில தற்காலிகமான வலியையும், இன்னும் சில தீவிர பிரச்சனையின் அறிகுறியாகவும் இருக்கும். மேல் வயிற்று வலி ஒருவருக்கு கடுமையாக இருந்தால், எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாமல் போகும். எனவே மேல் வயிற்று வலியை ஒருவர் அடிக்கடி சந்தித்தால், முதலில் இயற்கை வைத்தியங்களின் மூலம் சிகிச்சை அளியுங்கள். அதையும் தாண்டி வலி ஏற்பட்டால், சாதாரணமாக விடாமல், உடனே மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெறுங்கள்.
One common health problem that affects people of all ages is abdominal pain. The pain can be caused by many conditions. Here we listed some causes and remedies for upper abdominal pain.