காலா படத்துக்கு ஓபனிங் இசை எப்படி இருந்தால் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என யோசித்து வருகிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இது குறித்து அவர் ரசிகர்களிடமே கருத்தும் கேட்டுள்ளார். அதில், "காலா இசை உருவாக்கத்தில் உங்கள் எல்லோரையும் பங்கு பெற வைப்பது என்னுடைய கனவு. காலா படத்தின் அறிமுகப் பாடலுக்கான இசை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள்? உங்களுடைய ஆலோசனையை பாடலில் சேர்ப்பது எனக்குப் பெருமை. மிக்க நன்றி!" எனக் பதிவிட்டு, ரெட்ரோ 80களின் இசை, ஸ்டைலிஷ் 90 - 2000த்தின் இசை, மார்டன் டே எலக்ட்ரோ இசை, மேற்கூறிய அனைத்தும் கலந்து' என மொத்தம் நான்கு ஆப்ஷன்களைக் கொடுத்திருந்தார். ரசிகர்களும் போட்டி போட்டுக் கொண்டு வாக்களிக்கத் துவங்கினர். வாக்களிப்பின் முடிவில் "மேற்குறிய அனைத்தும் கலந்து" என்ற ஆப்ஷனுக்கு மக்கள் அதிக வாக்கு அளித்தனர். எனவே காலாவின் அறிமுகப் பாடல் வித்தியாசமாக அனைத்தும் கலந்த கலவையான இசையாக இருக்கும் எனத் தெரிகிறது.
Santosh Narayanan is taking special effort for setting Kaala opening music to satisfy all Rajini fans