ஈபிஎஸ் பதவி காலியாக வேண்டும் என்று டீ குடித்தேன்- ஸ்டாலின்

2018-02-14 9,294

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பதவி பறிபோக வேண்டும் என்பதற்காக காத்திருந்து டீ குடித்ததாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து, திருவள்ளூர் மாவட்ட தி.மு.க சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது நிர்வாகத் திறமையில்லாத காரணத்தினால்தான், எடப்பாடி அரசு மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் கட்டணத்தை உயர்த்தியுள்ளது என அவர் குற்றம்சாட்டினார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு கொள்ளை அடிப்பதிலேயே குறியாக உள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

DMK working president stalin has said in a meeting that he was taking Tea with OPS, after that OPS lost his CM post. Now taking tea with EPS, he also should lose his CM post Stalin said further.

Videos similaires