கருர் கோழிப்பண்ணையில் வருமான வரி ரெய்டு!

2018-02-14 567

தளவாப்பாளையத்தில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். கரூர் மாவட்டம் தளவாப்பாளையத்தில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரிக்கு சொந்தமான கோழிப்பண்ணை அமைந்துள்ளது.

இங்கு வரி ஏய்ப்பு புகார் வந்ததை அடுத்து வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. வருமான வரித்துறையினரின் இந்த சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Income tax officials conducting raid at a poultry farm near in Karur. The Income Tax Department has been conducting raid of tax evasion here. Over 10 officers seem to be involved in this raid.

Videos similaires