அரசு ஒப்பந்ததாரர் ஆர்.எஸ். முருகன் வீட்டில் ஐடி ரெய்டு!- வீடியோ

2018-02-12 12,968

அரசு ஒப்பந்ததாரரான ஆர்.எஸ்.முருகனின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். விஜயநாராயணத்தை சேர்ந்த முருகன் தற்போது திருநெல்வேலியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மதுரை மண்டலத்தில் சாலைப்பணி ஒப்பந்தத்தை யாருக்கு கொடுக்கலாம் என்பதை தீர்மானிப்பவர் முருகன்.

முக்கிய அரசியல் புள்ளிகளின் ஆதரவாளரான இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. மேலும் டெண்டர்களை ஒதுக்க லஞ்சம் வாங்கி பணத்தை குவித்துள்ளதாகவும் சந்தேகிக்கப்படுவதையடுத்து அவரிடம் கணக்கில் காட்டப்படாத பணம் இருக்கிறதா என்று வருமான வரித்துறையினர் கணக்கு வழக்குகளை சரி பார்த்து வருகின்றனர்.

Videos similaires