சொட்டு தண்ணீர் இல்லாமல் வறண்டு போகப் போகுதாம் பெங்களூரு- வீடியோ

2018-02-12 44

கேப் டவுனை தொடர்ந்து உலகின் 11 முக்கிய நகரங்களில் குடிநீர் இல்லாமல் போகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க நகரான கேப் டவுனில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு நபர் ஒருவர் 25 லிட்டர் தண்ணீர் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. கேப் டவுன் நகரில் கடைசி சொட்டு தண்ணீரும் தீர்ந்து விரைவில் ஜீரோ டே என்ற நிலை உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதேபோன்ற நிலை உலகின் 11 முக்கிய நகரங்களில் உருவாகும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.


worlds 11 cities most likely to run out of water like cape town. South Affrica's cape town city is heading towards zero day. Among the 11 cities Bengaluru also has placed in the list.