ஆம்பூரில் லஞ்சம் வாங்கிய காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டதுக்கு அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
வேலூர்மாவட்டம்,ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் லூர்து ஜெயராஜ் மாட்டு வண்டிகள் டிராக்டர் லாரிகளில் பாலாற்றில் மணல் கடத்துபவர்களிடம் மாதந்தோறும் மிரட்டி பணம் வசூலித்து வந்துள்ளார் இந்நிலையில் பாலாற்றில் மணல் அள்ளும் பன்னீர்செல்வம் என்பரிடம் மிரட்டி லஞ்சம் கேட்டுள்ளார் இது குறித்து பன்னீர்செல்வம் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் அளித்த ஆலோசனை படி ரசாயனம் தடவிய பணத்தை ஆய்வாளரிடம் அளித்துள்ளார் அப்போது லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் உதவி காவல் ஆய்வாளர் ஜெயராஜை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தியதில் லஞ்சம் தனக்காக வாங்கவில்லை என்று டிஎஸ்பி வாங்க சொன்னதாக அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் இதன் காவல்துணைகண்காணிப்பாளர் தன்ராஜ் மற்றும் உதவி ஆய்வாளரை கைது செய்து அவரிடம் இருந்து 1. 25 லட்சம் ரொக்கப்பணத்தையும் கைப்பற்றினர் இந்த தகவல் அறிந்த ஆம்பூர் பொதுமக்கள் டிஎஸ்பி அலுவலகம் எதிரில் பட்டாசுகளை வெடித்து பொதுமக்கள் மிரட்டி லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் கைது செய்யப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் இதுபோன்று லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கைது செய்ய வேண்டுமென கோஷமிட்டனர்