மீனாட்சி அம்மன் கோவில் கடைகள் அகற்றம்- வீடியோ

2018-02-09 2


தீவிபத்தை அடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதில் உள்ள கடைகள் அகற்றப்பட்டு வருகிறது


சில தினங்களுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுர வாசல் பகுதியில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது . தீ விபத்தில் அங்கு இருந்தகடைகள் மற்றும் புராதான சிற்பங்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளது . ஆயிரம்கால் மண்டபமும் தீ விபத்தால் விரிசல் ஏற்பட்டுள்ளது . தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்ட மதுரை ஆட்சியர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வில் கடைகளில் திருஷ்டி சுற்றியதால் தான் தீ பற்றி உள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அப்பகுதயில் உள்ள கடைகளை அகற்ற கோவில் நிர்வாகம் உத்தரவிடப்பட்டது இதனை தொடர்ந்து கடை உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தனர் இந்நிலையில் கோவில் பகுதியில் உள்ள 115 கடைகளை இன்று மதியம் 12 மணிக்குள் அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கடைகளை காலி செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

Videos similaires