ஆயுதங்களை தேடி சென்ற போலீஸாருக்கு 400 கிலோ செம்மரக்கட்டை- வீடியோ

2018-02-09 5,471

சென்னை பூந்தமல்லியை அடுத்த மலையாம்பாக்கத்தில் ரவுடி பினுவின் கூட்டாளிகளை கைது செய்த இடத்தில் 400 கிலோ செம்மரக்கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதனால் ரவுடி பினு செம்மரக்கடத்தலிலும் கொடி கட்டி பறந்தாரா என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். கேரளத்தை சேர்ந்தவர் ரவுடி பினு. இவர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரும் இவரது கூட்டாளிகளும் தேடப்படும் குற்றவாளிகளாக உள்ளனர்.
இந்நிலையில் போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி பூந்தமல்லியை அடுத்த மலையம்பாக்கத்தில் பினுவின் பிறந்த நாள் கொண்டாடுவதற்காக திரண்ட அவரையும், அவரது கூட்டாளிகளையும் போலீஸார் சுற்றி வளைத்தனர்.
அப்போது பினு, கணுகு உள்ளிட்ட 3 மூவர் போலீஸாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தப்பியோடிவிட்டனர். பிடிபட்டவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நம்பர் ஒன் ரவுடியாக உள்ள ராதாகிருஷ்ணனை போட்டு தள்ளுவதற்காக திட்டம் தீட்டியதாக கூறினர். மேலும் பினு உள்ளிட்டோரை தேடி தனிப்படை போலீஸார் சேலம் விரைந்தனர்.


Police seized 400 kg red sandalwood logs in Malayampakkam where Rowdy Binu's aides were arrested.

Videos similaires