தமிழ் இருக்கை அமைய ரூ. 1 கோடி நிதியை வழங்கினார் மு.க.ஸ்டாலின்- வீடியோ

2018-02-08 26

ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய ரூ. 1 கோடி நிதி அளிப்பதாக நேற்று அறிவித்த நிலையில் இன்று அந்த நிதியை நிதி திரட்டும் குழுவினரிடம் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். உலக பிரசித்தி பெற்ற ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, பாரசீகம், சமஸ்கிருதம், சீனம் ஆகிய மொழிகளுக்கு இருக்கைகள் அமைக்கப்பட்டு மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தமிழ் இருக்கைக்கென ரூ 40 கோடி செலவாகும் என ஹார்வர்டு பல்கலைக் கழகம் கூறியது.
இதையடுத்து தமிழ் ஆர்வலர்கள், நடிகர்கள், சமூக ஆர்வலர்கள் என தங்களால் இயன்ற உதவியை அளித்து வந்தனர். தமிழக அரசும் ரூ. 10 கோடி நிதியை அளித்தது. இந்நிலையில் இதுவரை ரூ. 38 கோடி நிதி திரட்டி விட்டதாக நிதி திரட்டும் குழுவினர் தெரிவித்தனர். மீதம் 2 கோடி நிதி பற்றாக்குறை குறித்து திமுக அறிந்தது. இதையடுத்து அந்த பற்றாக்குறையில் திமுக சார்பில் ரூ.1 கோடியை அளிப்பதாக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.


DMK Working President MK Stalin issues Rs. 1 crore for Harward University's Tamil Chair.

Videos similaires