கஞ்சா கொடுத்து என் மகளை நித்தியானந்தா கடத்தி விட்டார்-தந்தை புகார்- வீடியோ

2018-02-08 1

டாக்டருக்கு படித்த தம் மகனை கஞ்சா கொடுத்து மயக்கி நித்தியானந்தா சாமியார் கோஷ்டி கடத்தி விட்டாரே.. இதை கேட்பார் யாருமே இல்லையா? என பெரியகுளம் நீதிமன்ற வளாகத்தில் பெற்றோர் கதறியது அதிரவைத்துள்ளது. சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவின் பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் இருந்து டாக்டருக்கு படித்த மகன் மனோஜ்குமார் மற்றும் சிறுமி நிவேதா ஆகியோரை மீட்க வேண்டும் என்று பெரியகுளம் வடகரை சுப்பிரமணிய சாவடிதெரு பகுதியைச் சார்ந்த காந்தி என்பவர் போலீசில் புகார் கொடுத்தார். இப்புகாரின் அடிப்படையில் தேனி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வீ .பாஸ்கரன் உத்தரவின் பேரில் பெரியகுளம் காவல் ஆய்வாளர் முத்து பிரேம்சந்த் தலைமையில் போலீஸ் டீம் பிடதி சென்றது.
அங்கிருந்து மனோஜ்குமார் மற்றும் நிவேதா இருவரையும் மீட்டு அழைத்து வந்து பெரியகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற விசாரணையில் நிவேதா, உறவினர்களுடன் செல்ல விருப்பம் தெரிவித்தார்.




A Parent from Periyakulam was cried to rescue his Doctor Son from Swamy Nityananda.

Videos similaires