அதிமுக தலைமையிலான அரசு கவிழ்வதற்கான நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்து உள்ளார்.
மதுரையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து குறித்து விசாரணை செய்ய அமைக்கப்பட்டுள்ள கமிட்டி ஐ.ஏ.எஸ்.அதிகாரி மற்றும் நீதிபதி அளவில் இருக்க வேண்டும்.மீனாட்சி அம்மன் கோவில் மட்டும் அல்லாது பிற முக்கியமான ஆலயங்களிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கோவில் வளாகத்திற்குள் தேவையான பொருட்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டுமே தவிர, அவை வணிக வளாகமாகச் செயல்படக் கூடாது என்று அவர் குறிப்பிட்டார். மேலும், பேருந்து கட்டண உயர்வை கண்டித்து நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கலந்துகொண்டது. அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் 33 இடங்களில் கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெறும்.
Tamilnadu Assembly election may be conduceted with loksabha election says TNCC Chief Thirunavukkarasar. He also added that, Tamilnadu people need a political Change and it will happen soon.