காங்கிரஸ் கட்சி செய்த பாவங்களுக்கு இந்திய மக்கள் இப்போதும் விலை கொடுத்துக் கொண்டிருப்பதாக லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி கடும் குற்றச்சாட்டை முன் வைத்தார். குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சி உறுப்பினர்களும் பேசியிருந்தனர். உறுப்பினர்களின் உரைக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி இன்று நன்றி தெரிவிப்பு தீர்மானத்தின் மீது லோக்சபாவில் பேசினார்.
பிரதமர் பேச்சை ஆரம்பித்த போது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டு அவரது உரைக்கு இடையூறு செய்தனர். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரிக்கைவிடுத்து அந்த மாநில எம்.பிக்களும் கோஷமிட்டனர். வழக்கமாக பிரதமர் பேச்சுக்கு குறுக்கீடாக இதுபோல நடப்பதில்லை என்பதால், அவையில் பரபரப்பு நிலவியது.
NDA government has changed the work culture in the nation. Projects have been well executed and in a timely manner, Prime Minister Narendra Modi speaks during the debate on thanking the President's address.