தமிழ், தெலுங்கு இரண்டிலும் டாப் இடத்தில் இருக்கும் சிங் நடிகை தன்னை பற்றி சமீபகாலமாக வரும் கிசுகிசுக்களால் நொந்து போயிருக்கிறாராம். காரணம் செண்டிமெண்ட்தான். அக்கட தேசத்தை உயரமான இரண்டெழுத்து நாயகனுடன் டாப் ஹீரோயின்கள் கிசுகிசுக்கப்படுவது வழக்கம். அருந்ததி நடிகை, நம்பர் நடிகை என முன்னணி ஹீரோயின்கள் எல்லாம் கிசுகிசுக்கப்பட்டவர்கள்தான். அந்த நடிகருடன் சேர்ந்து கிசுகிசுக்கப்பட்டால் கேரியரில் ஓட்டை விழும். பின்னர் சிரமப்பட்டுதான் மீட்க வேண்டும் என்பது கிசுகிசுக்கப்பட்ட நடிகைகளின் அனுபவம். இந்த நடிகருடன் ஃப்ரெண்ட்ஷிப் இருப்பது தெரிந்தால் பிற நடிகர்கள் இணைய தயங்குவார்கள். இதுதான் உண்மையான காரணம். தனது வளர்ச்சியைப் பொறுக்க முடியாத போட்டி நடிகைகள் தான் இப்படி எல்லாம் கிளப்பி விடுகிறார்கள் என்று பார்ப்பவர்களிடத்தில் புலம்புகிறாராம் சிங்.
That singh actress is worrying about gossips on her with height actor.