சாராய வியாபாரி ராமுவின் முதல் மனைவி வினோதாவை 2011ம் ஆண்டு கொலை செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து எழிலரசியை விடுதலை செய்து காரைக்கால் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதிய சாட்சியமும், ஆதாரங்களும் இல்லாததால் இந்த வழக்கிலிருந்து அவர் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
சினிமா பாணியில் பல தொடர் கொலைகளை தனி ஆளாக நின்று பிளான் போட்டு செய்தவர் எழிலரசி என்றும், அவரின் பின்னால் பல ரவுடிகள் உள்ளதாகவும் புதுச்சேரி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கணவனுடன் வாழ்ந்து வந்த பெண் தற்போது பெண் தாதாவாகி புதுச்சேரி மாநிலத்தையே கலக்கி வருவதாகவும், அவரின் ரத்த சரித்திரத்திற்கு பின்னால் பல துரோகங்களும், வலியும் இருப்பதாக கூறுகிறார்கள் எழிலரசிக்கு ஆதரவாளர்கள்.