செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர், அடித்து விரட்டிய அமைச்சர்- வீடியோ

2018-02-06 2,924

உடன் நின்று செல்போனில் செல்ஃபி எடுத்த நபரை அடித்து போனை தள்ளி விட்டுள்ளார் கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார். கர்நாடக காங்கிரஸ் அரசில், மின்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் டி.கே.சிவகுமார். கிரானைட், ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவர், அடாவடிகளுக்கு பெயர் போனவர்.

காங்கிரசில், மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தபோதிலும், ஊழல் புகார்களால் முதலில் அமைச்சர் பதவி கிடைக்காத இவர், டெல்லி காங்கிரஸ் தலைமை லாபி மூலம், சித்தராமையாவுக்கு நெருக்கடி கொடுத்து அமைச்சரவையில் சேர்ந்தவர்.

ஹொசபேட்டையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ள நிகழ்ச்சியொன்றுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள டி.கே.சிவகுமார் சென்றிருந்தார்.அப்போது அமைச்சருடன் செல்ஃபி எடுக்கலாமே என்ற ஆசையில் வாலிபர் ஒருவர் இவரின் அருகே வந்து மொபைல் போனில் செல்ஃபி எடுக்க முயன்றார்.

Videos similaires