அதிமுக ஆட்சி அடுத்த வாரத்தில் கலையும்.... ஜெ. அன்பழகன்- வீடியோ

2018-02-06 1,029

அதிமுக ஆட்சி அடுத்த வாரத்தில் கலைந்து விடும் என திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நீட் தேர்வுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஜெ. அன்பழகன் பேசியதாவது: நீட் தேர்வுக்கு விலக்கு பெறாத எடப்பாடி அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தினார். என்னைப் பொறுத்தவரையில் எடப்பாடி அரசு ராஜினாமா செய்ய தேவை இல்லை.இந்த அரசுக்கு 111 எம்.எல்.ஏக்கள்தான் ஆதரவு தந்துள்ளனர். இந்த அரசு நீதிமன்றத்தின் படிகளிலே இருக்கிறது. அடுத்த வாரம் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வரும்போது இந்த அரசு தானாகவே கலைந்துவிடும். இவ்வாறு ஜெ. அன்பழகன் பேசினார். தினகரன் அணியின் 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பளிக்க இருக்கிறது. தினகரன் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானால் ஆட்சி தொடர்ந்து நீடிக்காது என்பதை சுட்டிக்காட்டி அன்பழகன் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.




DMK MLA J. Anbazhagan said that the AIADMK Govt will fall in next week on Monday

Videos similaires