நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்கக்கோரி ஜனநாயக உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் இல்லம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.