ரயிலில் இருந்து வாலிபரை தள்ளிவிட்ட திருநங்கை தற்கொலை முயற்சி- வீடியோ

2018-02-05 3

ஓடும் ரயிலில் இருந்து திருநங்கைகள் தள்ளிவிட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ள திருநங்கை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி ரயில்நிலையம் அருகே ஓடும் ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே உள்ள ஜி.பட்டவாடா கிராமத்தை சேர்ந்த சத்தியநாராயணா (32)கொலை செய்யப்பட்டார். அவரை காப்பாற்ற முயன்றபோது, உடன் பயணித்த அவரது உறவினர் காரம் வீரபாபு (20) படுகாயம் அடைந்தார்.

ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். எனவே, முதலில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனைக்கும் பிறகு, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.

Videos similaires