ஒரு கால் இருக்கும் போதிலும் மற்றொரு காலுக்கு கட்டையை பயன்படுத்திக் கொண்டு மனைவி மற்றும் குழந்தையை சைக்கிளில் அழைத்து செல்லும் இந்த மாற்று திறனாளியின் வீடியோவை பார்க்கும் போது மனதளவில் இவர் ஊனமில்லை என்பதையே காட்டுகிறது. மாற்றுத் திறனாளிக்கு வழங்கும் மூன்று சக்கர மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு அதில் பயணம் செய்வோரை பார்க்கும் போது அவர்களது மனதைரியம் எத்தகையது என்பதை நாம் பாராட்ட மறப்பதில்லை. அதிலும் ஒரு கால் இல்லாத நிலையில் சைக்கிள் ஓட்டிக் கொண்டு செல்லும் மாற்றுத்திறனாளியின் மன வலிமையை பறைசாற்றும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஆண்டவன் ஊனமாக படைத்துவிட்டானே என்று நினைத்துக் கொண்டு ஒரே இடத்தில் முடங்கி கிடக்காமல் இன்று பலர் தங்களால் இயன்ற தொழிலை செய்து பிழைத்து வருகின்றனர். திடகாத்திரமாக இருப்பவர்களே உழைக்க சோம்பேறித்தனமாக இருந்து கொண்டு அடுத்தவர்களை ஏமாற்றி பிழைக்கும் காலத்தில் எங்கோ வேலைக்கு சென்றுவிட்டு தனது மனைவி, குழந்தையை நெடுஞ்சாலையில் சைக்கிளில் அழைத்து செல்லும் இளைஞர் குறித்த வீடியோ காட்சிகள் நெகிழ வைக்கின்றன.