சூனா பானா தென்னாப்பிரிக்காவை புரட்டி எடுத்த இந்திய அணி- வீடியோ

2018-02-05 1,220

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபாரமாக வென்றது. முதல் போட்டியில் இந்திய ஸ்பின் பவுலர்கள் மிகவும் சிறப்பாக பந்து வீசினார்கள். இதையடுத்து இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி ஸ்பின் பவுலர்களை நம்பி களம் இறங்கியது. ஆடுகளம் சூழலுக்கு சாதகம் இல்லை என்றாலும் இந்தியா சென்ற போட்டி போல தில்லாக இறங்கியது. இந்த நிலையில் இந்த போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி இருக்கிறது. முக்கியமாக சாஹல் ருத்ர தாண்டவம் ஆடி இருக்கிறார்.

சென்ற போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்றது. இந்த போட்டியில் இந்திய கேப்டன் கோஹ்லி டாஸ் வென்றார். டாஸ் வென்ற கோஹ்லி, தென்னாப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

india won by 9 wickets in against south africa in second odi.