ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்... இந்தியாவிற்கு 217 ரன்கள் இலக்கு

2018-02-03 74

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியாவுக்கு 217 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நடந்து வருகிறது. பைனலுக்கு முன்னேறிய இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று பைனலில் மோதின

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. இந்திய அணியின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 47.2 ஓவர்களில் 216 ரன்களில் ஆஸ்திரேலியா ஆல்அவுட்டானது. கடைசி 33 ரன்களில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய தரப்பில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஜொனாதன் மெர்லோ அதிகபட்சமாக 76 ரன்கள் எடுத்தார். அந்த அணி கேப்டன் ஜேசன் சங்கா 13 ரன்களில் வெளியேறினார். இந்திய தரப்பில் இஷான் பொரேல் சிவ சிங், கம்லேஷ் நகர்கோடி, அனுகுல் ராய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சிவம் மாவி 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

under19 world cup cricket... australia fixed target 217 for india