மாணவிகளுக்கு வாந்தி மயக்கத்தால் பரபரப்பு- வீடியோ

2018-02-02 2

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பயிலக்கூடிய மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காவல்துறையின் விசாரணை மேற்கொள்ள முயன்ற போது நிர்வாகம் ஒத்துழைக்காமல் மாணவிகளை அவசரமாக கல்லூரி பேருந்தில் ஏற்றியதால் பரபரப்பு.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நஞ்சீயம்பாளையத்தை அடுத்துள்ள தெக்காலூர் பகுதியில் மஹாராணி கல்வியியல் கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரியில் வெளி மாவட்டங்களை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இன்று காலை செவிலியர் பயிற்சி பெரும் 60 மாணவ மாணவிகளை திருப்பூர் தலைமை அரசு மருத்துவ மனைக்கு அழைத்து வரும் பொழுது பேருந்தில் வந்த மாணவிகளுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் உடன் இருந்த மாணவ மாணவிகள் வாந்தி,மயக்கம் அடைந்த 9 பேரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர்.மேலும் மாணவர்கள் கூறுகையில் இங்கு பயிற்சிக்கு வரக்கூடிய மாணவ மாணவிகள் அனைவரும் காலையில் கல்லூரியில் உணவுகளை சாப்பிட்டுவிட்டு வருவதாகவும்,கல்லூரி விடுதியில் சமைக்கூடிய உணவுகள் தரமில்லாமல் உள்ளதாகவும் நிர்வாகத்திடம் கேட்டால் தங்களை தொல்லை செய்வதாகவும் மாணவ,மாணவிகள் கூறினார்.மேலும் அவசர சிகிச்சையில் இருந்த மாணவிகளை காவல்த்துறையினர் வந்து விசாரணை மேற்கொண்டு இருந்த பொழுது காவல்த்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் மாணவிகளை படுக்கையில் இருந்து அவசர அவசரமாக கல்லூரி பேருந்தில் ஏற்றிக்கொண்டு வெளியில் செல்ல முயன்றனர்.காவல்த்துறையினர் பேருந்தை நிறுத்தி மாணவிகளை மீண்டும் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சையில் சேர்த்தனர்.செவிலியர் பயிற்சி மாணவிகள் 9 பேர் வாந்தி,மயக்கத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது மருத்துவமனையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள் மாணவர்களிடம் பேட்டி கேட்க்கையில் பேட்டி கொடுக்கவும் பேட்டி கொடுத்தால் தங்களது படிப்பு முற்றிலும் வீணாகிவிடும் என்றும் கூறினார்.

Des : In Tirupur district, students in Darappuram were admitted to the hospital due to vomiting and drowsiness. When the police tried to conduct the investigation, the administration did not cooperate and urged students to rush into the college bus.

Free Traffic Exchange