கோவை மாவட்டம் அன்னூர் அருகே தோட்டத்தில் தங்கியிருந்த பெண்ணை கொன்று விட்டு, கணவர் மீது மின்சாரம் பாய்ச்சி விட்டு நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மேற்கு வங்க மாநில கொள்ளையர்கள் மூவரை தனிப்படை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள கணுவாக்கரை ஊஞ்சல் குட்டை தோட்டத்தை சேர்ந்தவர் மயில்சாமி, இவரது மனைவி ராஜாமணி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒரு மகள் கோவையில் வேலை பார்த்து வருகிறார். மற்றொரு மகள் படித்து வருகிறார்.
தம்பதியர் இருவரும் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இவர்கள் புதிதாக வீடு கட்டி வருகிறார்கள். இதற்கு டைல்ஸ் ஒட்டும் பணியில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 3 பேர் பணியாற்றி வந்தனர்.தொழிலாளர்கள் 3 பேரும் தோட்டத்து வீட்டிலேயே தங்கி வேலை செய்தனர். அவர்கள் மூன்று பேருக்கும் ராஜாமணி சமைத்து போட்டார். கடந்த வாரம் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் திடீரென ராஜாமணியை கொன்று விட்டு மயில்சாமி மீது மின்சாரத்தை பாய்ச்சி கொல்ல முயற்சி செய்தனர். சத்தம் போடவே 8 சவரன் நகை, 1 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு சென்று விட்டனர்.
Police arrest three workers from West Bengal deployed for flooring work in a newly built house near Kanuvakarai in Annur, had fled away with eight sovereigns jewels and Rs 1 lakh cash after attacking the farmer house owner, Mr. Myilsamy, and strangling his wife to death.