ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மக்களின் கருத்து

2018-02-02 36

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படம் குறித்து ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக், காயத்ரி, நிஹாரிகா உள்ளிட்டோர் நடித்துள்ள ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படம் இன்று பிரமாண்டமாக ரிலீஸாகியுள்ளது. படம் பார்த்தவர்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் சூப்பரான பிளாக் காமெடி. திரையுலகின் அடுத்த சாக்லெட் பாய் கவுதம் கார்த்திக். விஜய் சேதுபதி ப்ப்ப்பா செம.. படம் முழுக்க காமெடியாக உள்ளது...விஜய் சேதுபதி வழக்கம் போன்று வேற லெவல் நடிப்பு..கவுதம் கார்த்திக், ஆறுமுக குமார் அருமை. ஜஸ்டினின் பிஜிஎம், பாடல்கள் மிகவும் நன்றாக உள்ளது. நிச்சயம் ஹிட். கண்டிப்பாக பார்க்கவும். இந்த வருட முதல் மாதத்தில் வெளியான 14 படங்களில் எந்த படமும் பெரிய வெற்றி பெறவில்லை. பிப்ரவரி முதல் வாரம் நாளை ஐந்து படங்கள் ரீலீஸ் ஆக உள்ளன. தமிழ் சினிமாவில் வியாபாரம் உள்ள கதாநாயகனாக மாறி உள்ள விஜய் சேதுபதி நடித்து உள்ள ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் இவற்றில் முக்கியமான படமாகும்.

Vijay Sethupathy's Oru Nalla Naal Paarthu Solren is releasing in big way today.. The audience have recieved the movie well and are loving it. Here is the public's opinion on the movie.

Videos similaires