பாஜக ஆட்சியில் ஊழல் இல்லையா? - குஷ்பு-வீடியோ

2018-02-02 331

பாஜக ஆட்சியில் செய்யும் ஊழல்களை மூடி மறைத்து விடுகிறார்கள் என்றும், ஊழலுக்கு ஆதரவாக செயல்படுபவர்களுக்கு பதவிகளை கொடுக்கின்றனர் என்றும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார். தூத்துக்குடியில் ஐப்பெரும் விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வந்த குஷ்பு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், பாஜக தலைமையிலான மத்திய அரசின் கடைசி பட்ஜெட் இதுவாகதான் இருக்கும் என்றார். இனி மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரமுடியாது என்பதால் இதுவே கடைசி பட்ஜெட்டாக இருக்கும். இந்த பட்ஜெட்டால் எந்த வளர்ச்சியும் ஏற்படாது என்றார்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போடப்பட்ட திட்டங்களை மாற்றி பட்ஜெட் தாக்கல் செய்கின்றனர். இது ஊழல் இல்லாத அரசு என்று கூறுகின்றனர். பாஜக ஆட்சியில் செய்த ஊழலை மூடி மறைக்கின்றனர். ஊழல் இல்லாத அரசு என்றால் ராஜஸ்தானில் ஜெயித்திருக்க வேண்டுமே என்று கேட்டார் குஷ்பு.

இனி மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரமுடியாது என்பதால் இதுவே கடைசி பட்ஜெட்டாக இருக்கும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சொன்னது போல மத்திய அரசின் இந்த பட்ஜெட்டால் எந்த வகையிலும் வளர்ச்சி ஏற்படப் போவதில்லை என்று தெரிவித்தார்.


Videos similaires