எட்டு பேரை ஏமாற்றி திருமணம் செய்ய மோசடி மன்னன்- வீடியோ

2018-02-02 9

கணவரை இழந்த, விவாகரத்தான பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ய மோசடிகளுக்கு உடந்தையாக இருந்ததாக புருசோத்தமனின் 20 வயது மகள் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார் கீதாஞ்சலி. இவர் பல பெண்களை தனது தாயாரைப் போல இருப்பதாகக் கூறி புருசோத்தமனுக்கு மணம் முடிக்க காரணமாக இருந்துள்ளார். இவர்களுக்கு உடந்தையாக இருந்த காஜா உசேன், செரீப் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். கோவை பாப்பநாயக்கன்பாளையத்தைச் குமுதவள்ளி என்பவர், போத்தனூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த ஜனவரி 6ஆம் தேதி புகார் ஒன்று அளித்தார். அதில் கணவரை இழந்த தன்னை, மறுமணம் செய்து கொள்வதாக காந்திபுரத்தில் உள்ள திருமண உதவி மையம் மூலம் வெள்ளலூரைச் சேர்ந்த புருசோத்தமன் அணுகினார்.
தொழில் அதிபர் என்றும் 27 லாரிகள், வீடுகள், நிலம் இருப்பதாகக் கூறி பதிவுத்திருமணம் செய்து கொண்டார். ஏலத்துக்கு வரும் தனது வீட்டை மீட்க ரூ.4 கோடி வேண்டும் என்று கேட்டார். வழக்கில் வெற்றிபெற்றால் ரூ.17 கோடி வரும் என நம்பவைத்து பணத்தையும், 850 பவுன் நகையையும் பெற்றுக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்து தனது சொத்துகளை மீட்டுக் கொடுக்க வேண்டுமென தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் மோசடி, சதித்திட்டம் தீட்டுதல், திருமண மோசடி, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில், இவர் பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி பணம் பறித்ததும், பல மாவட்டங்களில் 25க்கும் மேற்பட்ட வழக்குகள் புருசோத்தமன் மீது இருப்பதும் தெரியவந்தது.




B Purushothaman of Vellalore and his daughter P Geethanjali, who were arrested in connection with a cheating case, were lodged at the Coimbatore Central Prison on Thursday.

Videos similaires