கியூப புரட்சியாளரும் அந்த நாட்டின் முன்னாள் அதிபருமான, பிடல் கேஸ்ட்ரோவின் மூத்த மகன் டயஸ் பலார்ட் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவருக்கு வயது 68. மன அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டிருந்த டயஸ் பலார்ட் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
பிடல் கேஸ்ட்ரோவின் மூத்த மகன் டயஸ் பலார்ட் உருவ ஒற்றுமையில் அப்படியே தனது தந்தையை போன்றவர் என்பதால் இவர் 'பிடலிடோ' என்று பெரும்பான்மையோரால் அழைக்கப்பட்டார். முன்னாள் சோவியத் யூனியனில், அணு இயற்பியல் படித்திருந்த அவர், கியூபா சயின்ஸ் அகாதமி மையத்தின் துணை தலைவராகவும், கியூபா அரசின் அறிவியல் ஆலோசகராகவும் பணியாற்றியவர்.
Eldr son of Cuban revolutionary Fidel Castro, Fidel Ángel Castro Díaz-Balart, has died in Havana after taking his own life, according to Cuba's state media.