டிஜிட்டல் மயமாகும் ரயில் நிலையங்கள் - பெரம்பூரில் அதிநவீன ரயில் பெட்டி தொழிற்சாலை- வீடியோ

2018-02-01 13,111

பெரம்பூரில் அதி நவீன ரயில் பெட்டி தொழிற்சாலை தொடங்கப்படும் என்றும், ரயில்கள், ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா, வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ரயில்வே துறையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

ரயில்வே துறையில் ரூ.1,48,528 கோடி முதலீடு செய்யப்படும். 12,000 ரயில் வாகன்கள் மற்றும் 5,160 ரயில்பெட்டிகள் வாங்கப்படும். மேலும் ரயில் பயணிகள் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தார். அனைத்து ரயில் பெட்டிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். அனைத்து ரயில்நிலையங்களிலும் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்

12,000 wagons, 5,160 coaches and 700 locomotives being procured. There is significant achievements of physical targets by the railways, Jaitley say

Free Traffic Exchange