ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை ஆணையத்திட்ம கொடுக்காமல் டிடிவி தினகரனிடம் கொடுத்தது ஏன்? என்று ஆறுமுகசாமி சசிகலாவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுமார் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்தார்.
அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்நிலையில் அவர் கடந்த நவம்பர் மாதம் முதல் தனது விசாரணையை தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் ஆர்கே நகர் தேர்தலுக்கு முன்பு ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ என்று கூறி ஒரு வீடியோவை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த வீடியோ சசிகலாவால் எடுக்கப்பட்டது என்றும் விசாரணைக்காக அவற்றை தினகரனிடம் கொடுத்திருந்ததாகவும் கூறப்பட்டது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி கமிஷன் இதுவரை 22 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற்றது. இந்நிலையில் சசிகலாவுக்கு ஆணையம் சம்மன் அனுப்பியது. சம்மனுக்கு பதில் அளிக்க வேண்டும் என்றால் தன் மீது புகார் கொடுத்தவர்கள் யார் என்ற விவரத்தை கூற வேண்டும் என்றும் ஆணையம் விசாரித்த சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்றும் சசிகலா தரப்பு கோரியிருந்தது.
Arumugasamy commission asks Sasikala that though she knows all the activities of this commission, why she not give the Jayalalitha's treatment video to the commission instead of TTV Dinakaran.